Homeசெய்திகள்உலகம்கொரோனா; சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

கொரோனா; சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

-

கொரோனா; சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

சீனாவின் வூகான் மாகாணத்தில் உள்ள நுண்கிருமிகள் ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவால் தான், கொரோனா தொற்று பரவியாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

கொரோனா தொற்று பரவலுக்கு ஆரம்ப புள்ளி சீனா

உலகை சுமார் 2 ஆண்டுகளாக ஆண்டுகளாக கொரோனா தொற்று ஆட்டிப்படைத்தது. உலகமே முடங்கிப்போன தொற்று பரவலுக்கு ஆரம்ப புள்ளியாக சீனா இருந்துள்ளதாக FBI இயக்குநர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா – சீனா இடையே மோதல் போக்கு

அதில், வூகான் வைராலஜி கல்வி நிலையத்தின் வளாகங்கள், நோய் கட்டுப்பாடு – தடுப்புக்கான சீன மையம் மற்றும் தடுப்பூசி உற்பத்தி மையத்திலிருந்து தொற்று பரவியிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரியல் தயாரிப்பு ஆய்வகத்தில் இருந்து கூட கொரோனா பரவியிருக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, அமெரிக்கா சீனா இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுக்கு சீன எவ்வாறு பதில் அளிக்கப் போகிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

MUST READ