Homeசெய்திகள்உலகம்குழப்பத்தில் அமெரிக்க உளவுத்துறை

குழப்பத்தில் அமெரிக்க உளவுத்துறை

-

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் க்ரூக்ஸ், சம்பவ இடத்திலேயே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், அவர் ஏன் ட்ரம்ப்பை கொலை செய்ய வந்தார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

குழப்பத்தில் அமெரிக்க உளவுத்துறைஅவருடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என எவருக்கும் காரணம் தெரியவில்லை. க்ரூக்ஸ் அரசியல் தொடர்பாக இதுவரை பேசியதே இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

க்ரூக்ஸ் பணிபுரிந்த அலுவலகத்தில் அவரது பின்னணியினை ஆராய்ந்துதான் வேலைக்கு எடுத்திருக்கிறார்கள். அவர்களும் க்ரூக்ஸுக்கு நற்சான்றிதழ் அளித்திருக்கின்றனர்.

அரசியல் ஈடுபாடே இல்லாத ஒருவர் ஏன் ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சிக்க வேண்டும் என்று புலனாய்வுத் துறையினர் (FBI) விழி பிதுங்கியுள்ளனர். ஆனால், க்ரூக்ஸ் பயன்படுத்திய துப்பாக்கி அவருடைய தந்தையுடையது என்பது உறுதியாகியிருக்கிறது.

MUST READ