Homeசெய்திகள்உலகம்அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை

-

- Advertisement -

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

அமெரிக்காவின் தற்போதைய அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆண்டின் தொடக்கம் முதலே நடைபெற்று வந்தன. ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும்,  குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டியிட்டனர்.

அதிபர் தேர்தலையொட்டி தபால் வாக்குகள் மற்றும் இ-மெயில் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்டோர் முன்னதாகவே வாக்களித்தனர். இந்த நிலையில் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று 50 மாகாணங்களிலும் நடைபெற்றது. இத்தேர்தலில் 16 கோடியே 50 பேர், வாக்களிக்க தகுதியானவர்கள்.

அமெரிக்காவில் 4 விதமான நேரங்கள் கடைபிடிக்கப்படும் நிலையில், இந்திய நேரப்படி இந்த தேர்தல்கள் நேற்று மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று தங்களது வாக்கினை செலுத்தினர். பெரும்பாலான மாகாணங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும். வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறும். அதன்படி, அமெரிக்க அதிபர் தேர்தல் முன்னணி நிலவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.

இண்டியானா, கெண்டக்கி, அலபாமா, மிஸ்ஸிசிபி, புளோரிடா,  தெற்கு கரோலினி, மேற்கு வர்ஜீனியா உள்ளிட்ட 9 மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். மேரிலாண்ட், வெர்மாண்ட், மாசசூசெட்ஸ், கனெக்டிகட், நியூ ஜெர்சி உள்ளிட்ட இடங்களில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். மேலும் டொனால்ட் ட்ரம்ப் 137 எலக்ட்ரோல் வாக்குகளும், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 99 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதுவரை எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில், 99.52 (54%) லட்சம் வாக்குகள் பெற்று டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார். கமலா ஹாரிஸ் 85.10 லட்சம் (45%) வாக்குகள் பெற்றுள்ளார்.

MUST READ