
அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், அமெரிக்காவின் வணிக வளாகங்களில் அதிகளவில் மக்கள் குவிந்து போட்டிப் போட்டு அரிசி வாங்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூரியகாந்தி, சோயா எண்ணெய்களின் விலை!
உள்நாட்டு விலையைக் கட்டுப்படுத்தவும், பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்கவும் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் தாக்கம் காரணமாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
அந்த வகையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அரிசி வாங்க கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் குவியத் தொடங்கினர். நீண்ட வரிசையில் காத்திருந்து அதிகளவில் அரிசி வாங்கி இருப்பு வைத்துக் கொள்வதாகவும், இதனால் சில இடங்களில் கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சில வணிக வளாகங்களில் பலரும் போட்டிப்போட்டு, மொத்தமாக அரிசி மூட்டைகளை வாங்குவது தொடர்பாக, வீடியோக்களும் பரவி வருகின்றன. இதையடுத்து, குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு மூட்டை அரிசி மட்டுமே வழங்கப்படும் என பல்வேறு வணிக வளாகங்கள் அமல்படுத்தியுள்ளன. அதற்கு முன்னதாக, ஒரே நபர் 20 அரிசி மூட்டைகளை வாங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ காலாண்டு லாபம் ரூபாய் 4,863 கோடியாக அதிகரிப்பு!
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பல கடைகளில் அரிசி இருப்பு இல்லை என்று பதாகை வைக்கும் அளவிற்கு மக்கள் வாங்கிக் குவித்துள்ளனர். இந்தியாவின் ஏற்றுமதி அரிசியைப் பெரிதும் நம்பியுள்ள அமெரிக்கா மட்டுமின்றி, துருக்கி மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளும் வெகுவாகப் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, கோதுமை மற்றும் சர்க்கரை ஏற்றுமதிக்கு, கடந்த ஆண்டு இந்தியா தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.