
ஒரே வாட்ஸ் ஆப் செயலியில் இரண்டாவது வாட்ஸ் ஆப் வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 9வது முறையாக நீட்டிப்பு!
மொபைல் ஃபோனில் தகவல் தொடர்புக்கு உலக மக்களிடம் ஆதிக்கம் செலுத்தும் செயலியாக வாட்ஸ் ஆப் உள்ளது. ஒரே ஃபோனில் இரண்டு வாட்ஸ் ஆப் செயலியைப் பயன்படுத்தும் வசதி ஏற்கனவே உள்ளது. அதற்கு இரண்டாவது வாட்ஸ் ஆப் செயலியைப் பதிவிறக்கம் செய்து, இரண்டாவது சிம் கார்டு தொலைபேசி எண் வழியாக செயல்படுத்தப்படும் நடைமுறை இருக்கிறது.
இரண்டு வாட்ஸ் ஆப் செயலியை இயக்க ஒவ்வொரு முறையும், ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு ‘லாக் அவுட்’ செய்து மாற வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், மாற்றி ஒரே லாகினில் இருந்து எளிதாக, ஒரே வாட்ஸ் ஆப் செயலியில் இருந்து மற்றொன்றுக்கு உடனடியாக மாறும் வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது.
அக்.30- ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூடுகிறது!
இதன்படி, ஒரு வாட்ஸ் ஆப் பக்கத்திலேயே மற்றொன்றுக்கு மாறும் பட்டன் இடம் பெறும். அதனை கிளிக் செய்து இரண்டாவது வாட்ஸ் ஆப் செயலிக்கு மாறிக் கொள்ளலாம். அதே நேரம், ஒரே செல்போனில் இரண்டாவது வாட்ஸ் ஆப் வசதியை பெற, இரண்டு சிம் கார்டு வசதியும், இரண்டாவது தொலைபேசி எண்ணும் வழக்கம் போல் அவசியமாகும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.