Homeசெய்திகள்உலகம்ஆஸ்கர் விருது பெற்ற நாவல்னி மீது விமர்சனம்

ஆஸ்கர் விருது பெற்ற நாவல்னி மீது விமர்சனம்

-

ஆஸ்கர் விருது பெற்ற நாவல்னி மீது விமர்சனம்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி வாழ்க்கை வரலாறு குறித்த படத்திற்கு, விருது கொடுக்கப்பட்டதை அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவாளர்கள் விமர்சித்துள்ளனர்.

 

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நாவல்னியை மையப்படுத்தி ஆவணப்படம்

அதிபர் புதின் மீது விமர்சனங்களை வைத்ததால், விஷம் கொடுத்து அலெக்சி நாவல்னியை கொலை செய்ய ரஷ்ய உளவு அமைப்பு முயன்றது என்பதை குறிப்பிட்டே ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் ஜனநாயகத்தை நிலை நாட்ட முயன்ற நாவல்னிக்கு நேர்ந்த கொடுமை, அவர் எப்படி உயிர் பிழைத்தார், தற்போது 11 ஆண்டு சிறை வாசம் என்பதை அடிப்படையாக கொண்ட காட்சிகள் ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ளன.

ஆஸ்கர் விருது கமிட்டி அரசியல் செய்வதாக அதிபர் புதின் தரப்பு புகார்

இவ்வாறான காட்சிகள் ரஷ்ய அதிபரை நேரடியாக விமர்சனம் செய்யும் அம்சங்கள் என்று புதினின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளார். ஆஸ்கர் விருது கமிட்டி ரஷ்யாவுக்கு எதிராக அரசியல் செய்வதாக அதிபர் புதின் தரப்பு தெரிவித்துள்ளது. அதே வேளையில் ரஷ்யாவில் ஜனநாயகம் கோரி போராட்டம் நடத்துவோர் ஆஸ்கர் விருது கமிட்டியை பாராட்டி உள்ளனர்

MUST READ