Homeசெய்திகள்உலகம்உலக அளவில் திடீரென முடங்கிய ட்விட்டர்!

உலக அளவில் திடீரென முடங்கிய ட்விட்டர்!

-

 

உலக அளவில் திடீரென முடங்கிய ட்விட்டர்!
Photo: Twitter

பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டர் உலகம் முழுவதும் ஒரு மணி நேரம் முடங்கியதால், பயனர்கள் அவதியடைந்தனர்.

வெங்கட் பிரபுவுடன் விஜய் இணையும் புதிய படம்… ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

உலகில் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக திகழ்வது ட்விட்டர். பல்வேறு தகவல்கள், படங்கள் ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ளவர்களிடம் பகிர்ந்துக் கொள்ள ட்விட்டர் உதவுகிறது. பிரபலங்கள் மட்டுமின்றி உலகத் தலைவர்கள் பலரும் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர். உலக அளவில் ஐந்து பேரில் ஒருவருக்கு ட்விட்டர் கணக்கு உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், நேற்று (ஜூலை 01) மாலை 06.00 மணியளவில் பல்வேறு நாடுகளில் ட்விட்டரின் சேவை திடீரென முடங்கியது. இதனால் ட்விட்டர் வாசிகள் செல்போன் மூலமும், கணினி மூலமும் ட்வீட் செய்ய முடியாமலும், பெற முடியாமலும் தவிப்புக்கு ஆளாகின.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கி இருந்த ட்விட்டர், மீண்டும் முழுமையான செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதன்பிறகு, ‘ட்விட்டர்டவுன்’ ஹேஷ்டாக்கில் ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மீம்ஸ்களைத் தெறிக்கவிட்டனர். அத்துடன், ‘ட்விட்டர்டவுன்’ ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது.

கிராபிக்ஸ் பணிகளில் தாமதம்… தள்ளி வைக்கப்படும் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி!

ட்விட்டர் முடங்கியது குறித்து விளக்கமளித்த அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், மாற்றங்களைச் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட பிழை என்று கூறினார்.

கடந்த மார்ச் மாதம் ட்விட்டர் இணையதளம் உலகளவில் முடங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ