ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பஹ்ரைன், டென்மார்க், ஜெர்மனி ஆகிய 10 நாடுகளின் கூட்டுப்படையினர் இணைந்து அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
வாத நோய்களுக்கு தீர்வளிக்கும் தழுதாழை மூலிகை!
ஏமன் நாட்டின் சனா விமான நிலையம் மற்றும் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகளின் கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ஏமனில் உள்ள ஹவுதி படையினர் மீதும் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
சனா, அல் ஹூதைதா, சத்தா, தாமர் ஆகிய நகரங்களின் மீது 10 நாடுகளின் கூட்டுப்படையினர் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஹவுதி நிலைகளைக் குறி வைத்து 10 நாடுகளின் கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தின.
“ஏமன் மீது தாக்குதல் ஏன்?”- அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் விளக்கம்!
ஏமன் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஏமன் படைகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுத்து வருகிறோம். சரக்கு கப்பல்களை வழிமறித்து ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சர்வதேச அமைப்புகளின் தொடர்ச்சியான எச்சரிக்கையை மீறி ஏமன் தாக்குதல் நடத்தியதால் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
கசப்பில்லா பாகற்காய் தொக்கு செய்வது எப்படி?
ஹவுதி படைகள் நவம்பரில் இருந்து சரக்குக் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்கள் கவலையளிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.