யோகி பாபு நடிப்பில் உருவாக்கியுள்ள ‘தூக்குதுரை’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
யோகிபாபு திரை உலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர்
தற்போது விஜய், சிவகார்த்திகேயன், ரஜினி, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் பெரும்பாலான படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்திருந்த தர்ம பிரபு மற்றும் மண்டேலா திரைப்படம் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இத்திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து ‘தூக்குதுரை’ என்னும் படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தை ட்ரிப் படத்தின் இயக்குனரான டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை ஓபன் கேட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கேஎஸ் மனோஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தூக்குதுரை திரைப்படத்தில் யோகி பாபு உடன் இனியா, மொட்ட ராஜேந்திரன், சென்ட்ராயன், மகேஷ் சுப்ரமணியம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.