Homeசெய்திகள்ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் மாநில காவல்துறைக்கான மண்டல 'ஜூடோ கிளாஸ்டர் போட்டி' 2023

ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் மாநில காவல்துறைக்கான மண்டல ‘ஜூடோ கிளாஸ்டர் போட்டி’ 2023

-

ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், 63 வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல ‘ஜூடோ கிளாஸ்டர்’ – 2023 போட்டி அக். 16 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை நடந்தது. இதில், ஜூடோ, கராத்தே, ஜிம்னாஸ்டிக், உஷு டைக்குவாண்டோ, பென்காக் சிலாட் மற்றும் வாள்வீச்சு ஆகிய போட்டிகள் நடந்தன.

இப்போட்டிகளில், சென்னை பெருநகர போலீஸ், ஆவடி, தாம்பரம் மற்றும் தமிழக ஆயுதப்படை போலீசார் பங்கேற்றனர். இந்நிலையில், போட்டியின் நிறைவு விழா நேற்று முன்தினம் ஆவடி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில்  மாநில காவல்துறைக்கான மண்டல 'ஜூடோ கிளாஸ்டர் போட்டி' 2023

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கமிஷனர் சங்கர் கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மூன்று நாட்கள் நடந்த இப்போட்டியில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில்  மாநில காவல்துறைக்கான மண்டல 'ஜூடோ கிளாஸ்டர் போட்டி' 2023

இப்போட்டியில், 146 பேர் தங்கப் பதக்கமும், 140 பேர் வெள்ளிப் பதக்கமும், 182 பேர் வெண்கல பதக்கமும் பெற்றனர். முதல் பரிசு தமிழக ஆயுதப்படை போலீஸ் அணியும், இரண்டாம் பரிசு ஆவடி போலீஸ் கமிஷனர் அணியும் பெற்றது. அதேபோல், ஜிம்னாஸ்டிக் பிரிவில் ஆவடி அணியும், வாள் வீச்சில் மத்திய மண்டல அணியும் கேடயம் பெற்றனர்.

ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில்  மாநில காவல்துறைக்கான மண்டல 'ஜூடோ கிளாஸ்டர் போட்டி' 2023

 

MUST READ