விடாமுயற்சி படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அஜித் மற்றும் திரிஷா ஆகிய இருவருமே மிகப்பெரிய ஸ்டார் நடிகர்களாக வலம் வருபவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா ஆகிய படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். அதைத்தொடர்ந்து விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் 5வது முறையாக இணைந்து நடித்துள்ளனர். எனவே இவர்களின் கூட்டணியில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது 2025 பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் வருகின்ற ஜனவரி 23 அன்று இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் எதிர்பார்த்த விதமாக இந்த படத்தில் இருந்து டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத் தொடர்ந்து சவதீகா எனும் பாடலும் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை (ஜனவரி 16) காணும் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.மேலும் இந்த ட்ரெய்லருடன் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடாமுயற்சி திரைப்படத்தினை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.