நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அதன் பின்னர் இவர் வெள்ளித்திரையில் நுழைந்து தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான டான், டாக்டர் ஆகிய படங்கள் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்த நிலையில் அமரன் திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. எனவே தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். அதேசமயம் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதன்படி சுதா கொங்கரா, சிபி சக்கரவர்த்தி ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் நடிகர் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகளும் குகன், பவன் என்ற இரு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் இன்று (ஜனவரி 14) பொங்கல் தினத்தை கொண்டாடியுள்ளார்.
உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் 🙏🙏
பொங்கலோ பொங்கல்!!
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் 😊🙏#HappyPongal #HappySankranti ❤️🤗 pic.twitter.com/B5VsSNsPoZ
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 14, 2025
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில், “உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். பொங்கலோ பொங்கல். அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அத்துடன் தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.