HomePongal Specialஅகிலம் ஆராதிக்க 'வாடிவாசல்' திறக்கிறது.... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்!

அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்’ திறக்கிறது…. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்!

-

- Advertisement -

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கங்குவா திரைப்படம் வெளியானது.அகிலம் ஆராதிக்க 'வாடிவாசல்' திறக்கிறது.... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்! மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் நடிகர் சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதற்கிடையில் இவர், பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். அதன்படி காளைகளை அடக்கும் பயிற்சிகளை மேற்கொண்டார் சூர்யா. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நீண்ட நாட்களாக தொடங்கப்படாமல் இருக்கிறது. இதற்கிடையில் வாடிவாசல் திரைப்படத்தில் பிரபல இயக்குனரும் நடிகருமான அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தான் வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது சமூக வலைதள பக்கத்தில், “அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது” என்று குறிப்பிட்டு வெற்றிமாறன், சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த அப்டேட் இன்று (ஜனவரி 15) மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ரசிகர்கள் பலரும் இதனை கொண்டாடி வருகின்றனர்.

MUST READ