விஜய் சேதுபதி நடிக்கும் ஏஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மகாராஜா எனும் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும். இதற்கிடையில் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படத்திலும் நடித்து வந்த நிலையில் இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி வெற்றி பெற்றது. அதே சமயம் விஜய் சேதுபதி ட்ரெயின், காந்தி டாக்ஸ் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அந்த வகையில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் எனும் படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்கத்தில் ஏஸ் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியின் 51 வது படமான இந்த படத்தினை 7 சி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கரண் பி ராவத் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ருக்மினி வசந்த், யோகி பாபு, பப்லு பிருத்விராஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே மலேசியா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அதைத் தொடர்ந்து இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ருக்மினி வசந்த் தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகியு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை (ஜனவரி 14) காணும் பொங்கலை முன்னிட்டு மாலை 6 மணி அளவில் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இந்த அறிவிப்பு ஏஸ் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -