HomePongal Specialமிகவும் எதிர்பார்க்கப்படும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் ட்ரெய்லர் அறிவிப்பு வந்தாச்சு!

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ட்ரெய்லர் அறிவிப்பு வந்தாச்சு!

-

- Advertisement -

ஏழு கடல் ஏழு மலை படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இயக்குனர் ராம் தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கிய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். மிகவும் எதிர்பார்க்கப்படும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் ட்ரெய்லர் அறிவிப்பு வந்தாச்சு!அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு போன்ற படங்கள் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தது இவர், நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோரின் நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தினை வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் இந்த படமானது பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்த அடுத்த பாடல்களும் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் ட்ரெய்லர் அறிவிப்பு வந்தாச்சு!மேலும் இந்த படமானது விரைவில் இந்த ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஏழு கடல் ஏழு மலை படத்தின் டிரைலர் வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரில் படக்குழுவினர் உழவர் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ