Homeசெய்திகள்சினிமா‘தி லெஜண்ட்’ ஓடிடியில் வெளியீடு

‘தி லெஜண்ட்’ ஓடிடியில் வெளியீடு

-

- Advertisement -

‘தி லெஜண்ட்’ திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு திரையில் வெளிவந்து வெற்றி பெற்றது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரபலமான துணிக்கடைகளில் ஒன்று ’சரவணா ஸ்டோர்’. அனைத்து தரப்பு மக்களுக்கு ஏற்ற வகையிலும், பிடித்த வகையிலும் சரவணா ஸ்டோர் கவரும்.

சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் தலைவர் அருள் சரவணன். தன்னுடைய சரவணா ஸ்டோர்ஸ் தி லெஜெண்ட் கடை விளம்பரத்திற்கு எந்தவொரு மாடல் மற்றும் நடிகர்களை எதிர்பார்க்காமல் தானே விளம்பர நிறுவனங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

திரையுலக ரசிகர்களால் செல்லமாக ‘தி லெஜண்ட்’ என்று அழைக்கப்பட்டார். அதற்கு காரணம், இவர் தி லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் வைத்திருப்பதால் மட்டுமல்ல…ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னனி கதாநாயகர்களுக்கு போட்டியாக, தன் படத்தையும் பான் இந்தியா அளவில் வெளியிட்டு அசத்தினார்.

‘தி லெஜெண்ட்’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என 5  மொழிகளில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.

தி லெஜெண்ட் : 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய முழுவதும் பான் இந்தியா படமாக வெளியான ’தி லெஜெண்ட்’ திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்த படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, ராய் லக்ஷ்மி உள்பட மூன்று கதாநாயகிகள் உள்ளனர்.

மேலும் நடிகர் சுமன், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், நடிகர் நாசர், மயில் சாமி, ரோபோ சங்கர், யோகி பாபு என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.

விசில் படத்தை இயக்கியஜே டி ஜெர்ரி இந்த படத்தை இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

ஹாரிஸ் ஜெயராஸ் இசையமைப்பில் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ஹிட் அடித்திருந்தது.

படம் முழுக்க ரொமான்ஸ், செண்டிமெண்ட், சண்டை காட்சிகள் என கலவையாக இருக்க, இந்த படத்தில் நடித்திருந்த லெஜெண்ட் சரவணாவின் முயற்சிகளுக்கு சினிமா ரசிகர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், தி லெஜெண்ட் திரைப்படம் திரையரங்குகளை தொடர்ந்து எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு இந்த படம் வெளியாகும் ஓடிடி தளம் மற்றும் நாள் குறித்து அப்டேட் தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ