Homeசெய்திகள்சினிமாஒரே நாளில் பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடத்தும் ரஜினி & சிவகார்த்திகேயன்!

ஒரே நாளில் பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடத்தும் ரஜினி & சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

ரஜினியின் ஜெயிலர் படமும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தில், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, சுனில், சரிதா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். மிஷ்கின் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இரு படத்திற்கும் ஒரு நாள் வித்தியாசம் இருக்கிறது. ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

.

MUST READ