Homeசெய்திகள்சினிமா"இனிமே எனக்கு மார்வெல் படத்துல நடிக்க சான்ஸ் கிடைக்கும், ஏன்னா"... நடிகை க்ரீத்தி ஷெட்டி!

“இனிமே எனக்கு மார்வெல் படத்துல நடிக்க சான்ஸ் கிடைக்கும், ஏன்னா”… நடிகை க்ரீத்தி ஷெட்டி!

-

- Advertisement -

நடிகை க்ரித்தி ஷெட்டி கஸ்டடி படம் குறித்து பேசியுள்ளது வைரல் ஆகி வருகிறது.

வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிப்பில் ‘கஸ்டடி’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். பங்கர்ராஜூ படத்தை அடுத்து இரண்டாவது முறையாக கஸ்டடி படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார்.

நடிகர் அரவிந்த் சாமி கஸ்டடி படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சரத்குமார், பிரியாமணி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ‘இசைஞானி’ இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

தற்போது நடிகை க்ரீத்தி ஷெட்டி கஸ்டடி படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

“ஒவ்வொரு படத்திலும் ஹீரோ வில்லனைக் கொல்ல முயற்சிக்கிறார். ஆனால் கஸ்டடியில் ஹீரோ வில்லனைக் காப்பாற்ற முயல்வதுதான் படத்தின் சுவாரசியமான அம்சம்.

எனது கதாபாத்திரம் படம் முழுவதும் பயணிக்கிறது. எனவே மக்களுக்கு மிகவும் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. இது ஒரு நீண்ட பாத்திரம். இந்தப் படத்துக்காக ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி செய்தேன். இது ஒரு ஆக்‌ஷன் என்டர்டெய்னர், இந்தப் படத்துக்குப் பிறகு மார்வெல் ஸ்டுடியோவில் இருந்து எனக்கு அழைப்பு வரும் என்று வெங்கட் பிரபுவிடம் கூறினேன்.

நாக சைதன்யா எனக்கு பிடித்த நடிகர் மட்டுமல்ல, விருப்பமான நபரும் கூட. அவருடனான நட்பு காரணமாக எங்கள் ஆன் மற்றும் ஆஃப் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்தது.

வெங்கட் பிரபு தன்னை செட்டில் ரவுடி என்று அழைப்பார்.. தனிப்பட்ட முறையில் நான் கொஞ்சம் ரவுடி. அரவிந்த் சாமி, சரத் குமார், சம்பத் மற்றும் வெண்ணல கிஷோர் போன்ற நடிகர்களுடன் பணிபுரிந்தது மிகவும் இனிமையான உணர்வு.” என்று தெரிவித்துள்ளார்.

கஸ்டடி மே 12-ம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

MUST READ