Homeசெய்திகள்கட்டுரைமுக்கோண காதல்

முக்கோண காதல்

-

- Advertisement -

முக்கோண காதல்

கடிகார முல்லை விட அதிகமாக நகர்ந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டதில் நேற்று நானும் அவசர அவசரமாக சென்று ரயிலில் ஏறினேன்.

பின் ஜன்னல் ஓரத்தில் ஒரு இருக்கையை பிடித்து அமர்ந்துகொண்டேன் அடுத்து இரயில் நிலையத்தில் ஒரு டீனேஜ் பெண் ஏறினாள்.

 

என் அருகே அமர்ந்தாள் அவளின் கண்கள் சற்று கலங்கி இருந்தது. அவளிடம் என்னமா, என்ன ஆச்சு? என்று கேட்க தோன்றியது. அவளிடம் பேச தொடங்கினேன் அந்த பெண்ணின் பெயர் அபி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).

நான்: என்னமா ஏன் இப்படி அழுதுக்கொண்டு இருக்கிங்க என்று கேட்டேன்?

அபி: நான் எட்டு வருடங்களாக ஒருவரை (மித்தின்) காதலித்தேன் ஆனால் இப்போது அவன் வேறு ஒரு பெண்ணை காதலிக்கின்றேன் என்று அவன் கூறுகிறான் .

நான்: ஏன் என்ன ஆயிற்று, அவன் எதாவது உன்னை மிரட்டு கிறானா, இல்லை தொந்தரவு செய்கிறானா. சொல்லுமா என்னால் முடிந்த உதவி செய்கிறேன் என்றேன்.

அபி: அவனை என்னை மிரட்டினால் கூட கஷ்டம் இல்லை. முதலில் அவனாக வந்து என்னை காதலிக்கிறேன் என்று சொன்னான் நான் மறுப்பு தெரிவீத்ததும் என்னை சுற்றி சுற்றி வந்து காதலிக்க செய்துவிட்டு.

இப்பொழுது பிரியா என்ற பெண்ணை காதலிப்பதாக கூறுகிறான், ஆனால் இவர்கள் இருவருக்கும் இதற்குமுன்னே காதல் இருந்துள்ளது, ஆனால் அதை மறைத்து, பிரியா என் தோழி என எனக்கு அறிமுகம் செய்தான்.

பிரியாவிடம் என்னை அவன் தோழி என்று சொல்லி அவளையும் நம்பவைத்துள்ளான்.

நாங்கள் சென்னையில் சுற்றாத இடங்களே இல்லை, என் பெற்றோருக்கும் அவனை தெரியும், மித்தினிற்க்கு  நான் வாங்கி தராத பரிசுப்பொருள் எதுவும் இல்லை. கையில் கட்டும் வாட்ச்-ல் இருந்து, செருப்பு, உடை, போன், என பல பரிசுகளை வாங்கிக் கொடுத்து இருக்கிறேன். அவனும் எனக்கு பரிசு கொடுத்திருக்கிறான். எனக்கு நீ இன்னொரு அம்மா மாதிரி என்று எல்லாம் ஆசை வார்த்தை கூறினான்.

ஒரு நாள் அவன் பிரியா-வை காதலிப்பது என் தோழி ஒருத்தியின்  மூலம் எனக்கு தெரிய வந்தது.

அவனிடம் சென்று சண்டை போட்டேன், ஆனால் அவன் நான் உன்னை காதலிக்க வில்லை, நட்ப்பாக தானே பழகினேன், நேரம் போவதற்காக மட்டும் தான் உன்னோடு பேசினேன், நான் காதலிப்பது பிரியாவை மட்டும் தான் என்று சொல்லிவிட்டான்.

அவன் பேசியது வலித்தாலும், விருப்பம் இல்லாமல் ஒருவரை நேசிப்பது தவறு, அவனை விட்டு விலகிவிட்டேன். ஆனால் அவன் என்னை அப்படி நினைக்கவில்லை.

பிரியா-வின் பேச்சை கேட்டுக்கொண்டு. என்னை வேறு ஒரு பையன் கூட சம்மந்தப் படுத்தி பேசுகிறான்.

பின்னர் பிரியா-வை தொடர்பு கொண்டு என்னை இருவரும் நிம்மதியாக இருக்க விடுங்கள், எதற்கு நான் வேலைசெய்யும் இடம் எல்லாம் வந்து அவன் தொல்லை செய்கிறான், என சொன்னேன்.

நான்: பிரியா-வின் நம்பர் உனக்கு எப்படி தெரியும்?

அபி: பிரியா என்னுடைய தோழி என மித்தின் எனக்கு அறிமுகப்படுத்தினான், அன்று இரவே பிரியா-வின் மொபைல் எண்ணை எனக்கு கொடுத்து நட்ப்பாக பேச சொன்னான்.

நான்: நீ அவளிடம் நேற்றைய தினம் என்ன பேசினாய்

அபி: எனக்கு இதில் மட்டும் உதவு பிரியா எனக்கு அவன் துரோகம் செய்தும் அவனை நான் எதுவும் செய்யவில்லை என்று மட்டும் தான் கூறினேன்.

ஆனால் அவர்கள் இருவரும் சேர்ந்துக்கொண்டு என் அண்ணாவிடம் நான் அவர்களை பிரிப்பதற்காக பார்க்கிறேன், என் நம்பரை உங்கள் தங்கை  வேறு ஒரு பையனிடம் வாங்கி இருக்கிறாள.

என்று எல்லாம் பொய் சொல்லி, எல்லாம் பழிகளையையும், தவறையும் என் மீது திருப்பிவிட்டார்கள்.

எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு  நான் என்றால் அவ்வளவு பிடிக்கும் ஆனா, என்னை பற்றி அவரிடம் நான் பொய் சொல்கிறேன்.

வேறு ஒரு பையனோடு சுற்றுகிறேன் என்று எல்லாம் சொல்லிவிட்டான். நான் தவறு செய்து இருக்க மாட்டேன் என்று, என் அம்மா மட்டும் தான் என்னை நம்பினார்.

என்னிடம் யாரும் சரியாக முகம் கொடுத்து கூட பேசுவது இல்லை “காதலித்த பாவதிர்க்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா”, இதற்கு என் உயிரையே விட்டுவிடலாம் போல் இருக்ககிறது என்று சொல்லி அழுதால் அபி.

நான்: எல்லோரும் அப்படித்தான் அபி, அவர்கள் தப்பித்து கொள்ள நம்மை மாட்டிவிடுவார்கள், இவர்களுக்காக எல்லாம் நீ உன் உயிரை விடா நினைக்காதே.

உன் அம்மா அப்பாவை மட்டும் நினைத்துப்பார், உன்னை இந்த அளவிற்கு கொண்டு வர அவர்கள் எவ்வளவு கஷ்ட்ட பட்டிருப்பாங்க, நடந்ததை எல்லாம் ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடு.

உன் இலட்சியத்தை நோக்கி பயணம் செய். என்று அவளிடம் ஆறுதல் சொல்லிவிட்டு இறங்கினேன்.

காதல்:

“நம்மை அழகாக காட்டுகிறது என்று காதலிக்கிறோம்

ஒரு நாள் அழவைக்கும் என்று தெரியாமல்”.

MUST READ