Homeசெய்திகள்கட்டுரைஇரயில்வே பணியாளராக வடமாநிலத்தவர் - மக்கள்?

இரயில்வே பணியாளராக வடமாநிலத்தவர் – மக்கள்?

-

இரயில்வே பணியாளராக வடமாநிலத்தவர்- மக்கள்?

வட மாநிலத்தவர்கள் இரயில்நிலையங்களில் பணியச்சீட்டு பணியாளராக பணியாற்றுவதில் மக்களின் கருத்து என்ன ?

வந்தாரை வாழ வைத்த சென்னை என்ற காலம் போய் இப்பொழுது வடமாநிலத்தவர்கள் ஆளுக்கின்ற சென்னை என்றக்காலம் வந்துவிடும் போல் இருக்கிறது!.

இன்று காலை மாதந்திர சீசன் (train season pass) வாங்குவதர்க்காக பயணச்சீட்டு அலுவலகம் சென்றேன் புதுப்பித்த பின்னர் அதை சரிப்பார்த்து நின்றுக்கொண்டிருந்தேன்.
எனக்கு பின்னர் ஒரு வயதான முதியவர் ஒருவர் பயணச்சீட்டு கேட்டுக்கொண்டிருந்தார் அதற்கு பயணச்சீட்டு வழங்குபவர் ஹிந்தியில் எத்தனை டிக்கெட் வேண்டும் என கேட்டிருக்கிறார். அவரின் கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாமல் நின்ற முதியவரின் நிலைமையை புரிந்துக்கொண்டு அவரக்கு உதவ நான் அவரின் அருகில் சென்றேன்.

முதியவரை எங்கு செல்ல பயணச்சீட்டு வேண்டும் என்றும் எத்தனை டிக்கட்டுகள் வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். அதை அருகில் இருந்த நான் கேட்டு பதிலளித்து அந்த முதியவருக்கு பயணச்சீட்டை  வாங்கிக்கொடுத்துவிட்டேன்.

பின் இரயில் எத்தனை மணிக்கு வந்து சேரும் என முதியவர் கேட்க.

பயணச்சீட்டு அலுவலர்: அது வரும் பொழுது தான் வரும் சரியான நேரம் தெரியாது என கூறியிருக்கிறார்.
முதியவர்: இப்படி சொன்னால் எப்படியப்பா? அதை சொல்வது தானே உங்கள் வேலை, இரயில் சற்று வர காலத்தாமதம் ஆகும், அல்லது இந்த நேரத்தில் வரும் என்று சொல்லிவிட்டால். சிற்றுண்டி எதாவது வாங்கிக்கொண்டு செல்வேன் என்று சொல்லியிருக்கிறார்.
பயணச்சீட்டு அலுவலர்: நீங்கள் பேசும் மொழி எனக்குபுரியவில்லை. ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று பதில் சொல்ல.
முதியவர்: நான் சற்று வயது தளர்ந்தவன் அதவும் அந்தக்காலத்து ஆள், தாய் தமிழை தவிர, வேறு எதுவும் எனக்கு தெரியாது சார் என்று சொல்ல.
பயணச்சீட்டு அலுவலர்: அதற்க்கு நான் என்ன செய்வது உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் ஹிந்தி கத்துக்கொள்ளுங்கள் என்று ஹிந்தி மொழியில் சொல்லியிருக்கிறார்.

முதியவரின் வேண்டுக்கோள் : பின் கோபமடைந்த முதியவர் வாக்குவாதம் செய்ய இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. நான் என்ன படித்தவனா அல்லது பணக்காரனா, சாதாரண தினக்கூலி தெருவில் காயக்கறி வியாபாரம் செய்பவன், பயணச்சீட்டு வாங்குவதற்கே ஹிந்தி கற்றுக்கொண்டு வரவேண்டும் என்றால்? வெளிமாநிலம் செல்ல எந்த மொழிக்கற்றுக்கொண்டு வர வேண்டுமாம்?
படித்தவர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு மொழியில் பேசி வாங்கிக்கொண்டு செல்வர்கள் அல்லது மொபைலில் பதிவு செய்துகொள்வார்கள் .
ஆனால் எங்கள மாதிரி நடுத்தர மக்கள் எப்படி இதை செய்வது. இதற்க்கு எதாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா ? எங்களையும் பற்றி சற்று சிந்திக்குமா? என்றுக் கேட்டுக்கொண்டார் முதியவர்.

MUST READ