மின்சாரம் துண்டிக்கபட்டால் மக்களின் நிலை?
ஒரு நாள் முழுவது மின்சாரம் துண்டிக்கபட்டால் நடுத்தர மக்களின் நிலை என்னவாகும்?
மின்சாரத்தை இல்லங்கள், அலுவலகங்கள், ஹோட்டல்கள் என்று உபயோகிக்காத இடமே இல்லை. நடுத்தர வாசிகள் மட்டுமின்றி சாலையோர வியாபாரிகளும் உபயோகித்து வருகின்றனர்.
ஒரு நாள் முழுதும் மின்சார சேவை துண்டிக்கபட்டால் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அன்றாட நிலை என்ன?அப்படி ஒரு நாள் மின்சாரசேவை துண்டிக்கபட்ட நிலையில் நான் சந்திதவர்தான் இந்த சேட்டன் அண்ணா, பழரச கடை (Juice shop) வைத்திருக்கிறார்.
அனைத்தும் நட்டம் ஆகிவிட்டது
பலசரக்குகளை தினமும் நான் வேனில் தான் இறக்குமதி செய்கிறேன் அதற்க்கான வண்டி கூலி மட்டும் 600ரூபாய் அதுமட்டுமின்றி ஐஸ்கட்டிகள் பழங்கள், பால் என அன்றாடம் வாங்கும் பொருளின் விலை 1200 ரூபாய்.
இந்த தொழிலில் எனக்கு வரும் வருமானம் எனக்கு போதுமானது தான். ஆனால் இன்று திடிரென மின்சார சேவை பாதிக்கப்பட்டதால், பழங்கள், பால், மற்றும் ஐஸ்கீரிம் என அனைத்தும் நட்டம் ஆகிவிட்டது.
நாங்கள் என்ன ஜெனரேட்டரா வைத்திருக்கிறோம் அதை உபயோகித்து வேலை செய்வதற்கு. சில பழங்களை மட்டும் தான் மறு நாள் உபயோகிக்க முடியும் பால், ஐஸ்கட்டி, குளிர்ந்தநிலையில் இல்லை என்றால் அனைத்தும் கெட்டுபோகிவிடும். இதனால் வண்டிக்கூலி, பழங்கள் நட்டம் மட்டும் இல்லாமல் என்னுடைய அன்றைய வாழ்வாதாரமும் பாதிக்கிறது ஒரு நாள் மட்டும் என்றாலே, என்னால் சமாளிக்க முடியாது, இதுவே ஒரு வாரம் என்றால்?
மக்களின் கோரிக்கையையும் அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும்
நான் கேரளாவில் இருந்து வந்து இங்கே வேலைசெய்கிறேன். தினம் வரும் லாபத்தை ஈட்டித்தான் வாரம் ஒரு முறை ஊரில் இருக்கும் என் குடும்பதினருக்கு பணத்தை அனுப்புகிறேன் பணம் அனுப்பாவிட்டால் அவர்களின் நிலைமை?
மின்சார சேவை நிறுத்தப்போகிறோம் என அரசு ஏதேனும் முன் அறிக்கை கொடுத்திருந்தால் நான் அதற்கேற்றார் போல தயாராகி இருப்பேன். என்ன மாதிரி தின கூலியை நம்பி இருக்கும் மக்களின் கோரிக்கையையும் அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் என வருத்தத்துடன் கூறினார் சேட்டன் அண்ணா.
இவரை அடுத்து நாம் சந்தித்த ஒரு நடுத்தர குடும்பத்தினர், மதியழகி.
மதியழகி பெயருக்கு ஏற்றத்தைபோல அழகாக உள்ள இவளிடம் பேசிக்கொண்டே அவளின் தாயிடம் பேச தொடங்கினோம்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டால் எங்களின் நிலைதான் மிகவும் மோசம்
ஒரு நாள் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் எங்களின் நிலைதான் மிகவும் மோசம். காரணம் என் கணவர் கட்டுமான வேலைசெய்து வருபவர் ஆனால் அந்த வருமானத்தை வீட்டில் தர மாட்டார் சம்பாதித்த பணத்தை எல்லாம் குடித்தே அழிப்பார்.
என் பிள்ளைககளை காப்பாற்ற காலை மற்றும் இரவு டிபன், மதியம் சாப்பாடு என தள்ளு வண்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறேன்.
சட்டினி மற்றும் மசாலா பொருட்கள் அரைப்பது தானே மிக சிரமம்
ஒரு நாள் மின்சாரம் பாதிக்கப்பட்டாள் என் வேலையை செய்வது மிக சிரமம். அப்படி மின்சார பாதிப்பு ஏற்பட்டால் முன்னரே இட்லி மாவு, வடை மாவு என சில பொருட்களை அரைத்து வைத்தக்கொண்டாளும் சட்டினி மற்றும் மசாலா பொருட்கள் அரைப்பது தானே மிக சிரமம். இதனால் எங்கள் அன்றாட ஜீவனம் மிகவும் பாதிக்கிறது.
சற்று எனக்கு வயது அதிகம் என்பதால் மாலை நேரத்தில் வெளிச்சம் இல்லை என்றால் எனக்கு கண் பார்வை மங்கலாக தெரியும். இரவு நேரங்களில் விளக்கு இல்லாமல் தெருவில் நின்றுக்கொண்டு சமைக்க முடியாது.
வெளிச்சம் இல்லாமல் சமைக்கிறேன்
அந்நிலையில் வெளிச்சம் இல்லாமல் சமைக்கிறேன் என்றாலும், சாப்பிட்டபின் வாடிக்கையாளர்களிடம் காசு வாங்கி சரியான சில்லறை தருவது கடினம் , அதில் ஏமாற்றுபவர்களும் உண்டு.
ஒரு நாள் முழுதும் மின்சாரத்தை நிறுத்தினாலோ அல்லது நாங்கள் வசிக்கும் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலோ நடுத்தர மக்களை தான் அதிகம் பாதிக்கிறது. என் மூத்த மகள் கல்லூரி படிப்பும், இளைய மகள் பள்ளி படிப்பும் படிக்கிறார்கள்.
நடுத்தர மக்களை தான் அதிகம் பாதிக்கிறது
ஒரே விளக்கை வைத்துக்கொண்டு தான் இருவரும் படிப்பதும் எழுதுவதும் உண்டு. அவர்களுக்கு அது கஷ்டமாக தானே இருக்கும்.
தமிழக அரசுக்கு வேண்டுக்கோள்
சில அரசியல் தலைவர்கள் தேர்தல் நேரத்தில் பணமோ பொருளோ தருவதை விட எலெக்ட்ரிக் லைட் அல்லது எலெக்ட்ரிக் பேட்டரி எனக்கொடுத்தல் எங்களை போன்ற மக்களுக்கு அது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று தமிழக அரசுக்கு வேண்டுக்கோள் வைத்தார் மதியழகியின் தாய்.