தலைவலி

-

- Advertisement -

தலைவலி

தலைவலி தீர்வு கான சில வழிமுறைகள்

உலகம் முழுக்க, இன்றைக்குத் தவிர்க்க முடியாத வலிகளில் பிரதான இடம் பிடித்திருப்பது தலைவலிதான்.

‘காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரையிலா இருக்கும்?’ என வேதனையோடு புலம்புபவர்களும் இருக்கிறார்கள். சரி… தலையில் உண்டாகும் இந்த வலிக்கு என்ன காரணம்? வாகன இரைச்சல், அதீத வேலைப் பளு, குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையை முடிக்கவேண்டிய நிர்பந்தம், இத்தனைக்கும் நடுவில், எதிர்காலம், குடும்பம் பற்றிய யோசனைகள்-கவலைகள், செரிமானக் கோளாறு என தலைவலிக்கு இப்படி எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்.

மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது பட்டை. தினமும் மாலை வேளையில் பட்டை சேர்த்த பிளாக் டீ அருந்திவந்தால் சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்குமாம்.

தலை வலி மெல்ல மெல்ல குறைய:

கண்களை மூடி இடது கை கட்டைவிரலின் முதல் ரேகைக்கு மேல் உள்ள பகுதியை, வலது கைவிரல்களால் கேப் (Cap) போல பிடித்துக்கொண்டு 10 நிமிடங்கள் வரை மிதமான அழுத்தம் கொடுக்க வேண்டும், தலைவலி மெள்ள மெள்ள குறையத் தொடங்கும்.

இரண்டு உள்ளங்கைகளையும் நன்றாகத் தேய்த்து, மிதமான சூடு வந்ததும் கண்களை, அந்தச் சூட்டோடு பொத்திக் கொள்ளவும் இரண்டு நிமிடங்கள் வரை மிதமான அழுத்தம் கொடுக்கவும்.

பின் கண்களை மூடிக்கொண்டு ரிலாக்ஸாகச் சாய்ந்து கொள்ளுங்கள். முகத்தில் தண்ணீரை வேகமாகத் தெளித்துக் கழுவுவதாலும் குறைய வாய்புள்ளதாக கூறுகின்றனர்

நாள் முழுவதும் வெயிலில் அலைந்து வேலைசெய்பவர்கள், இதில் குறிப்பிட்டுள்ள சில வகை உணவுகளைத் தவிர்த்துவிட்டாலே இந்தப் பிரச்னையில் இருந்து தப்பித்துவிடலாம். சிப்ஸ், ஜாம், கார்ன்ஃப்ளேக்ஸ் போன்ற நைட்ரேட், எம்எஸ்ஜி சேர்க்கப்பட்ட உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். புகை, மதுப் பழக்கத்தைக் கைவிடவேண்டியது அவசியம். ஆல்கஹால், நிகோட்டின், கஃபைன் உள்ளிட்டவை வலியை அதிகரிக்கும்.

இதுக்குறித்து சென்னை தாம்பரத்தில் இருக்கும் குழந்தை மருத்துவர் V.M.பிரசன்ன வெங்கடேஷ். அவர்கள்  தனது முக-நூல் பக்கத்தில் கூறியிருந்தார்.

 

MUST READ