பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு பற்றி கவலை யாருக்கு? பெற்றோருக்கா அல்லது பிள்ளைகளுக்கா?
பொதுவாக தேர்வு என்றால் அதில் முதலிடம், வெற்றி, தோல்வி என பலவும் உண்டு ஆனால் தேர்வை கண்டு பின் வாங்குபவர்கள் குறைவு.
ஒவ்வொரு வருடமும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு நடைபெறுவது உண்டு.
கடந்த 2020 -ல் கொரோனாவை கண்டு பயந்தவர்கள் அதிகம். ஆனா அதுக்கான “ஆள் நாங்க இல்லடா“- னு சொன்னவங்க தான் நம்ப கொரோனா batch பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்.
ஆனா நம் முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அனைத்து தேர்வர்களையும் All pass செய்ய வேண்டும் என்று கூறியபோது
அவரை “தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே” என்று சொல்லாத மாணவர்களே இருக்க முடியாது.
ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் ஆன்-லைன் தேர்வும் இல்லை ஆல் பாஸும் இல்லை.
இப்போது தேர்வை கண்டு மாணவர்களின் மனநிலை என்னவாக உள்ளது?
பெற்றோர்கள் பிள்ளைகளின் மனநிலையை புரிந்துக்கொள்கிறார்களா? இல்லை அவர்களை கட்டாயம் முதல் மதிப்பெண் தான் வாங்க வேண்டும் என்று வற்புறுத்துக்கிறார்களா?
தேர்விற்காக சில டியூஷன் சென்டர்களுக்கு பிள்ளைகளை அனுப்புகிறார்களே அதில் பிள்ளைகளுக்கு விருப்பம் இருக்கிறதா ? இல்லையா?
இன்றைய நாள் உனக்கு எப்படி இருந்தது? பாடங்கள் புரிந்ததா இல்லையா என்று எத்தனை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கேட்கிறார்கள் ?
ஏனெனில் கடந்த ஆண்டு வரை மட்டுமே தேர்வில் தோல்வியடைந்த 12,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் மற்றும் மதிப்பெண் குறைவால் தற்கொலை செய்து கொண்டவர்களும் இதில் உள்ளனர்.
தற்போதைய மாணவர்களுக்கு பெற்றோர்கள் நண்பர்களா இல்லையா?
இதுகுறித்து மாணவர் ஒருவரிடம் கருத்தைக் கேட்டபோது, அவர் என் பெயர் ஜீவன் இந்த ஆண்டு நான் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதப்போகிறேன். தினமும் காலை 5மணிக்கு எழுந்து டியூசன் சென்று விடுவேன், மீண்டும் வந்து பள்ளிக்கு கிளம்பிவேன். பின்னர் மாலை வந்ததும் அதே போல் டியூசன் தான், டியூசன் படிப்பு எனக்கு மிகவும் புடிக்கும்.
ஏனெனில் வீட்டிலேயே இருந்தால் என்னால் அதில் சரியாக கவனம் செலுத்த முடியாது, என் பக்கத்து வீட்டு தோழன் என்னை விளையாடலாம் வாடா என்று அழைப்பான், சரி விளையாடி விட்டு வந்து படிக்கலாம் என்று நான் சென்று விட்டால், உடல் சோர்வாகி விடும், பின் எங்கிருந்து நான் படிக்கச் செய்வது, படுத்து உறங்கதான் செய்ய தோனும்.
அதுவே நான் டியூசன் சென்றால்?
பள்ளியில் என்ன நடத்தினார்கள், அதில் சந்தேகம் உள்ளதா, நாளை ஏதேனும் (class test ) கொடுத்திருக்கிறார்களா என எல்லாம் கேட்பார்கள், படிக்க வைத்து அங்கேயும் (test) எழுத சொல்லுவாங்க, (Tuition test) முடிந்த பின் மறுநாளுக்கான வீட்டு பாடமும் கொடுத்து அனுப்புவார்கள்.
ஆனால் படிப்பதை விட எனக்கு ஓவியம் வரைவது மிக மிக புடிக்கும் பல போட்டிகளில் கலந்து பரிசையும் வாங்கியுள்ளேன். எப்பொழுதும் படிப்பு படிப்பு என்று இருப்பதால் மாதம் இருமுறை என் அப்பா mind relax செய்யவதற்காக வெளியே அழைத்துச்செல்வார். என் அப்பா ஒரு ஆட்டோ ஓட்டுனர் அவர் படும் கஷ்டங்கள் எனக்கு தெரியும் அதனால் நான் கட்டயமாக அதிக மதிப்பெண் எடுப்பேன்…
மேலும் இதுக்குறித்து மாணவனின் அப்பாவிடம் பேசிய போது, என் மகன் விருப்பம் மற்றும் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் என் மகன் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று ஆசை தான் ஆனால் அவன் எந்த மதிப்பெண் எடுத்தாலும் எனக்கு அதில் மகிழ்ச்சி.
உங்கள் மகன் என்னவாக வேண்டும் என்று ஆசை என்று கேட்டதற்கு,
அது அவன் வாழ்க்கை, அவன் மிக பெரிய ஆளாக ஒரு நாள் வருவான், ஆனால் அவனுக்கு ஓவியத்திறமை அதிகம் உள்ளது. அது அவனுக்கு விருப்பம் என்றால் அவனுக்கு தேவையான அணைத்து உதவிகளையும் என்னால் முடிந்த வரை நான் செய்துக்கொடுப்பேன்.
“என்னால் உலகிற்கு வந்த என் மகன் அவன் திறமையால் உயர வேண்டும் ஒரு தகப்பனாக நான் அதை கண்டு ரசிக்க வேண்டும்” என்று கூறினார் ஜீவனின் அப்பா ரமேஷ்.