Homeசெய்திகள்ஆவடிதிருநின்றவூர் நகராட்சியில் ஊழல் புகார். ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பு!

திருநின்றவூர் நகராட்சியில் ஊழல் புகார். ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பு!

-

- Advertisement -

ஆவடியை அடுத்த திருநின்றவூர் நகராட்சியில் பாலங்கள் அமைத்தல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக சமூக ஆர்வலர் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்துள்ளார்.

திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட விக்னராஜன் நகரில் உள்ள பூங்காவை புதுப்பிக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் 16 லட்ச ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது.

Home

அதில் செயற்கை நீர்வீழ்ச்சி, 66 பெஞ்ச் காலம் போடப்பட்டு இரும்புவேலி, நடைபாதை, குழந்தைகள் விளையாட தரமான பொழுதுபோக்கு விளையாட்டு சாதனங்கள் மற்றும் பூங்காவை அழகு படுத்தும் விதமாக புல் தரை, செடிகள் நடுவது ஆகிய பணிகளை செய்ய ஆணை வழங்கப்பட்டது.

இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது, அதற்கான தொகை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு வழங்கிவிட்டனர். ஆனால் பூங்காவில் 50 சதவீத பணிகள் கூட முறையாக நடைபெறவில்லை என சமூக ஆர்வலர் புகார் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய 10 ரூபாய் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் பாஸ்கரன், பூங்காவை சீரமைக்க டெண்டர் கொடுத்த போது செடிகள் நட 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் சுமார் 20 செடிகள் மட்டுமே நடப்பட்டுள்ளதாகவும், அதன்படி பார்த்தால் நடப்பட்ட ஒரு செடியின் மதிப்பு 2,500 ரூபாய் ஆகுவதாக தெரிவித்துள்ளார். இதில் ஆதாரப்பூர்வமாக  மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பது அம்பலமாவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் திருநின்றவூர் 27 வது வார்டு  அன்னை இந்திரா நகரில் 5, 6, 7 ஆகிய சாலைகளில் சிறு பாலங்கள் அமைத்து மூன்றே மாதம் ஆன நிலையில், அதனை மறைத்து மீண்டும் சிறு பாலங்கள் அமைக்க  டெண்டர் விடப்பட்டுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தும் அதிகாரிகள் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Home

அன்மையில் தரம் உயர்த்தப்பட்ட திருநின்றவூர் நகராட்சியில் இதுவரை நிரந்தர பொறியாளர், சுகாதார ஆய்வாளர், நகர அமைப்பு ஆய்வாளர் உள்ளிட்ட அரசு உழியர்களை நியமிக்கப்படாததால் பொது மக்களின் அத்தியாவசிய பணிகள் முடங்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து முதலமைச்சர், துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு புகார் அளித்துள்ளதாகவும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் வேதனையுடன் கூறியுள்ளார்.

MUST READ