Homeசெய்திகள்சென்னைபெரம்பூர் நகைக்கடை கொள்ளை- 2 பேர் கைது

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை- 2 பேர் கைது

-

- Advertisement -

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை- 2 பேர் கைது

சென்னை பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

கொள்ளை - கைது

சென்னை பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் வெல்டிங் மிஷினால் கடையை ஓட்டைப்போட்டு கடந்த 10ஆம் தேதி ஒரு கும்பல் 9கிலோ தங்க நகைகள் மற்றும் 20லட்சம் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றது. மேலும் நகைக்கடையில் இருந்த டிவி.ஆர் கருவிகளையும் கொள்ளையர்கள் எடுத்து தப்பி சென்றுள்ளனர். போலீஸ் பூத் அருகே நடைபெற்ற இக்கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். சம்பவ

இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கொள்ளையர்கள் தப்பி சென்ற காரின் பதிவெண் போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து பல மாநிலங்களுக்கு சென்ற தனிப்படை போலீசார், இதே போல ஓட்டைப்போட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடித்தும், கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன் ஆதாரங்களை வைத்தும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சென்னை பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேரை தனிப்படை போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர்.கர்நாடக கொள்ளையர்கள் கஜேந்திரன், திவாகரன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

MUST READ