Homeசெய்திகள்சினிமாநாக சைதன்யாவின் 'கஸ்டடி' படப்பிடிப்பு நிறைவு!

நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ படப்பிடிப்பு நிறைவு!

-

- Advertisement -

இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் நாக சைதன்யா கூட்டணியில் எடுக்கப்பட்டு வந்த “கஸ்டடி” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தந்துள்ளார். அதேபோல் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நாக சைதன்யா. இந்நிலையில், முதல் முறையாக இயக்குநர் வெங்கட் பிரபுவும், நடிகர் நாக சைதன்யாவும் இணைந்திருக்கக கூடியத் திரைப்படம் ‘கஸ்டடி’ (CUSTODY). தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில், மிகப்பெரிய பொருட் செலவில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

நாக சைதன்யா கதையின் நாயகனாகவும், கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, நடிகர் அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்கிறார். கதையின் மிக முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகள் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் மூலம் நடிகர் நாக சைதன்யா நேரடித் தமிழ்ப் படத்தில் அறிமுகமாகிறார். அதேபோல, இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இசை மேதைகளான தந்தை-மகன் ‘இசைஞானி’ இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.

இத்திரைப்படம் மே மாதம் 12-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. அதனை படக்குழு வீடியோ வாயிலாக மகிழ்ச்சியுடன் அறிவித்தனர்.

MUST READ