‘கஸ்டடி’ திரைப்படம் மலையாளப் படத்தை காப்பியடித்து எடுக்கவில்லை என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து ‘கஸ்டடி’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார்.
நடிகர் அரவிந்த் சாமி வில்லனாக நடித்துள்ளார். சரத்குமார், பிரியாமணி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ‘இசைஞானி’ இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்தப் படம் வரும் மே 12-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் கஷ்டடி திரைப்படம் மலையாளத்தில் வெளியான நாயாட்டு படத்தை வைத்து தான் இன்ஸ்பைர் ஆகி கஸ்டடி படத்தை எடுத்தேன் என்று வெங்கட் பிரபு தெரிவித்ததாக பல செய்திகள் வெளியாகி வந்தன.
நாயாட்டு படத்தில் ஜோஜூ ஜார்ஜ், குஞ்சாக்கோ போபன், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது. படத்தில் கைது ஆவதிலிருந்து தப்பிக்க மூன்று காவலர்கள் ஓடிக் கொண்டே இருப்பர். இந்தக் கதை தான் கஸ்டடி எடுக்க முன்னுதாரணமாக இருந்ததாக கருத்து வெளியாகி வந்த நிலையில் வெங்கட் பிரபு இதை மறுத்துள்ளார்.
ஹிஹிஹிஹி உண்மை இல்லை சகோ :))) அது நாளை அனைவருக்கும் தெரியும். நான் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்!! தயவு செய்து பார்த்துவிட்டு நாளை தெரிந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.