Homeசெய்திகள்க்ரைம்விசாரணையின் போது தப்பிக்க முயன்ற ரவுடிகளை சுட்டு பிடித்த காவல் துரையினர்

விசாரணையின் போது தப்பிக்க முயன்ற ரவுடிகளை சுட்டு பிடித்த காவல் துரையினர்

-

விசாரணைக்காக அழைத்து சென்ற போது போலீசாரை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடிகள் இருவரை சுட்டு பிடித்த போலீசார்.

திருச்சி, புத்தூர், வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் துரைசாமி மற்றும் சோமசுந்தரம். இருவரும் சகோதரர்கள். துரைசாமி மீது கொலை, கஞ்சா கடத்தல் , கொள்ளை, ஆள் கடத்தல் குறிப்பாக புதுக்கோட்டையில் இளவரசன் என்பவர் கொலை உள்ளிட்ட 69 வழக்குகள் உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 30க்கும் அதிகமான வழக்குகளும் உள்ளது.

அதேபோல, சோமசுந்தரம் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட 22 வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை இளவரசன் கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக துரை மற்றும் சோமு ஆகிய இருவரை இன்று(20.02.2023) காலை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

அவர்கள் கொள்ளை அடித்த நகைகள் குறித்து விசாரித்த போது அதனை புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் அருகே மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, இருவரையும் உறையூர் காவல் ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் தங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் சோமசுந்தரம், போலீஸ் வாகனத்தின் ஸ்டீரியங் வீலை திடீரென திருப்பியதில் சாலையில் இருந்து விலகி அருகில் இருந்த வயல்வெளியில் பாய்ந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட இரு ரவுடிகளும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆயினும் சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்ற போது ரெளடிகள் ஏற்கனவே போலிஸ் வேனில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த அரிவாளை எடுத்து போலீசாரை தாக்கினர்.

இதில் ஆய்வாளர் மோகன், தலைமை காவலர்கள் அசோக், சிற்றரசு இருவருக்கும் கைகளில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆபத்தை உணர்ந்து கொண்ட ஆய்வாளர் மோகன் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டதில் சோமசுந்தரம், துரைசாமி இருவருக்கும் முழங்காலுக்கு கீழ் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, நடந்த சம்பவம் குறித்து ஆய்வாளர் மோகன் மாநகர காவல் துறை கட்டுப்பாட்டிற்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் காயம் அடைந்த அனைவரையும் திருச்சி அரசு மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் கோவையில் நீதிமன்றம் வெளியே வாலிபர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து அழைத்து வந்தனர்.

அப்போது அவர்கள் போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற போது போலீசார் அவர்களை காலில் சுட்டு பிடித்தனர் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சியில் இரண்டு ரவுடிகள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் ரவுடிகள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

MUST READ