- Advertisement -
ஆரணியில் முத்துமாரியம்மன் தேர் பவனியில் பக்தர்கள் பரவசம் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு மகா தேரோட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள எஸ்.வி.நகரம் கிராமத்தில் மாசி மாத 150ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு மகா தேரோட்டம் நடைபெற்றது.
மகா தேரோட்டத்தை வரவேற்கும் விதமாக அனைத்து இல்லங்களின் வாசல்களிலும் வண்ணக் கோலம் மற்றும் பூக்கோலம் வரைந்து சிறப்பித்தனர்.
இதனையடுத்து, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் மகா தேரில் உள்ள ஊஞ்சல் தாலாட்டில் அமர வைத்து அனைத்து வீதிகளிலும் பவனி வந்தது. மேலும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.