Homeசெய்திகள்மாவட்டம்முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் வரத்து குறைப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் வரத்து குறைப்பு

-

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.25 அடியாக சரிந்ததை தொடர்ந்து அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 640 கன அடியாக குறைப்பு.

தேனி, திண்டுக்கல், மதுரை, இராம்நாடு, சிவகங்கை மாவட்ட மக்களின் மற்றும் கால்நடைகளின் ஜீவாதாரமாகவும் விளங்குவதும் முல்லை பெரியாறு அணையாகும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீரினை பயன்படுத்தி ஐந்து மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் நடைபெறுகின்றது.

முல்லைப் பெரியாரின் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சதுரகிரி மலை, தாணிக்குடி, முல்லை குடி பகுதிகளின் கடந்த டிசம்பர் மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் டிச 27 அன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி 142 அடி வரை உயர்த்தப்பட்டது (152 அடிக்கு) அணையின் மட்டும் 142 அடியாக உயர்ந்ததை தொடர்ந்து அணையிலிருந்து தமிழகத்திற்கு 2,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 142 அயில் இருந்து தொடர்ந்து சரிந்து வந்தது.

இன்று முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் 122.25 அடியாகவும், அணையின் நீர்மட்டம் குறைந்ததை தொடர்ந்து அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 640 கன அடியாகவும், அணைக்கு 67 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

MUST READ