Homeசெய்திகள்இந்தியாசாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் - அகிலேஷ் யாதவ்

சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் – அகிலேஷ் யாதவ்

-

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் – சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகாக இதுவரை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளாத நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என பிகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உத்திரபிரதேச மாநில சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஒட்டுமொத்த மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி வர வேண்டுமென்றால் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் உரிய மக்கள் உரிய மரியாதையை பெறுவார்கள் எனவும் அம்பேத்காரின் கனவும் நனவாகும் என கூறிய அகிலேஷ் யாதவ் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை என்றால் உரிய மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்காமல் போகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

MUST READ