Homeசெய்திகள்இந்தியாமகாகாலேஷ்வர் கோயிலில் சுவாமி தரிசனம் - விராட்

மகாகாலேஷ்வர் கோயிலில் சுவாமி தரிசனம் – விராட்

-

இந்தியா, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு விராட் கோலி, அனுஷ்கா சர்மா உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்றனர்.

விராட் கோலி மற்றும் அவரது மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா உஜ்ஜயினியில் உள்ள புகழ்பெற்ற மகா காலேஷ்வர் கோயிலுக்குச் சென்றனர்.

இந்தூரில்(Indore) நடந்த 3 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் வெற்றிப் பயணத்தை தொடர்ந்தது.

நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 9 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

அதற்கு முன்பு, மத்தியப் பிரதேசத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பு, விராட் கோலி மற்றும் அவரது மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா உஜ்ஜயினியில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்று சிறப்பு அபிஷேகங்கள் செய்து பூஜையில் கலந்து கொண்டனர்.

கோயில் பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த இவர்களின் புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ