இந்த நோய்க்கு மருந்து ஏதுவும் கிடையாது, அன்பான கவனிப்பு மட்டுமே அவசியம்.
டிமென்ஷியா என அழைக்கப்படும் இந்த மறதி நோய் பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு உண்டாகும் பாதிப்பு. இந்த நோய் ஏற்படுவதன் காரணம், மூளை நரம்பு அணுக்கள் செயல் இழப்பதால் ஏற்படும் தாக்கமே. இதன் பாதிப்பு குறித்து அமெரிக்க சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட 20 அமைப்புகள் இணைந்து ஆய்வு நடத்தினர்.
தற்போது இந்தியாவில் 90 லட்சம் முதியோர்கள் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. வரும் 2030 -ம் ஆண்டில் இந்த பாதிப்பு இருமடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அபர்ஜித் பல்லவ் தேவ், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் டிமென்ஷியா பாதிப்பு பொதுவாக 60 வயதுக்கு மேலே உள்ள முதியோர்களுக்கு ஏற்படுகிறது , குறிப்பாக இந்தியாவில் ஆண்களை விட பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது எனவும் இந்த நோய்க்கு மருந்து ஏதுவும் கிடையாது அன்பான கவனிப்பு மட்டுமே தேவை என்று கூறுகிறார்.