மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக் கொண்டார்.
பேனா நினைவு சின்னமானது 2,263 சதுர மீட்டர், சின்னத்திற்கு செல்லும் நடைபாலமானது 2,073 சதுர மீட்டரும், பின்னல் நடைபாலமானது 1856 சதுர மீட்டர் பரப்பளவில் அந்த சின்னம் அமைக்கப்பட உள்ளது. ஆக மொத்தம் 8,551 சதுர மீட்டர் பரப்பளவில் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் அமைக்கபட உள்ளது.
இந்த நினைவுச் சின்னத்தில் கருணாநிதியின் பொன்மொழிகள் பொறிக்கப்பட உள்ளது.
கருணாநிதியின் நினைவிடத்தின் உள்ளே இருந்து கடலின் மேல் 360 மீட்டர் தூரம் நடந்து சென்று பேனா நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பேனா சின்னம் 81 கோடி ரூபாய் செலவில் தமிழ் நாடு அரசு சார்பில் அமைக்கப்பட உள்ளது.
இந்த பேனா சின்னம் அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த கலைஞர் பேனா நினைவுச் சின்ன கருத்து கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டார்.
கலைஞர் பேனா நினைவுச் சின்னத்தை கடலுக்குள் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், கருணாநிதியின் நினைவிடத்தில் பேனா நினைவுச்சின்னம் வைப்பதை எதிர்க்கவில்லை ஆனால் அதை கடலுக்குள் வைக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம்! என்று தன் கருத்தை தெரிவித்தார் சீமான். கடலுக்குள் நினைவு சின்னத்தை அமைப்பதை எதிர்க்கிறோம் என்றார் சீமான்.
நினைவுச் சின்னத்திற்காக கடலில் கற்களை கொட்டுவதால் பவளப்பாறைகளும், மீன் பிடி துறைமுகங்களும் பாதிக்கப்படும். மேலும், கடலுக்குள் மீறி பேனா நினைவுச் சின்னம் வைத்தால் அதை ஒரு நாள் உடைப்பேன் என்று சீமான் கண்டனம் தெரிவித்தார்.