Homeசெய்திகள்அரசியல்அருந்ததியர் சமுதாய மக்களை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி சீமான்

அருந்ததியர் சமுதாய மக்களை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி சீமான்

-

அருந்ததியர் சமுதாய மக்களை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தேனியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் அருந்ததியர் சமுதாய மக்களை தெலுங்கு வந்தேறிகள் எனக்குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


அதன் தொடர்ச்சியாக தேனியில் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப் புலிகள், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சீமானை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.

அப்போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் கைக்கூலியாக செயல்படும் சீமான், சாதிய வன்மத்துடன் அருந்ததியர் சமுதாய மக்களை இழிவு படுத்தி பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கோசங்களை எழுப்பினர். பின் தங்கள் கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் வழங்கி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

MUST READ