Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் நீட் தேர்வு ஒரு போதும் ரத்து செய்யப்படாது- அண்ணாமலை

தமிழகத்தில் நீட் தேர்வு ஒரு போதும் ரத்து செய்யப்படாது- அண்ணாமலை

-

- Advertisement -
kadalkanni

தமிழகத்தில் நீட் தேர்வு ஒரு போதும் ரத்து செய்யப்படாது- அண்ணாமலை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த வேலம்பட்டியில் கடந்த மாதம் 8ம் தேதி ஏற்பட்ட குடும்ப தகராறில் ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார்.

annamalai

இந்த நிலையில் தமிழக பாஜக சார்பில் இறப்பு தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் பிரபுவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் பாஜக சார்பில் வழங்கப்படும் என அறிவித்தனர். அதன்படி நேற்று ராணுவ வீரர் குடும்பத்திற்கு நேரில் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து பத்து லட்ச ரூபாய் காண காசோலையை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “ராணுவ வீரர் உயிரிழந்தது தமிழக மக்களின் மனநிலையை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ஐந்து கோடி நிவாரணம் மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் சிறப்பாக அற்புதமாக பாதுகாப்பாக உள்ளனர்.

பீகார் மாநில பாஜக தலைவர் வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்தார். அதற்கு தமிழக மக்கள் சிறப்பாக இருக்கிறார்கள், தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசும் வட மாநில தொழிலாளர்களை பாதுகாப்பாக வைத்து இருக்கின்றனர் என நாங்கள் தெரிவித்தோம் . தமிழ்நாட்டின் மேல் இப்படி ஒரு அவப்பெயர் வருவதை நான் விடமாட்டேன். சமூக வலைத்தளங்களில் தமிழக மக்களுக்கு அவப்பெயர் வரும் வகையில் செயல்படுகின்றனர். அதனை ஒருபோதும் நாங்கள் விட மாட்டோம், வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனையில் தமிழக அரசுடன் முழு ஒற்றுமையுடன் உள்ளோம். தமிழகத்தில் நீட் தேர்வு ஒரு போதும் ரத்து செய்யப்படாது ” என்றார்.

MUST READ