- Advertisement -
நாடாளுமன்ற தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம்- அண்ணாமலை
நாடாளுமன்ற தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம்தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “விசிகவின் கோட்டையாக சொல்லப்படும் கடலூர் மாவட்டத்திலேயே பாஜக நன்றாக வளர்ந்து வருகிறது. திருமாவளவன் தொகுதியிலேயே பாஜக வளர்ந்துவருவதால் நாடாளுமன்ற தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம்தான். விசிக தலைவர் மாறி மாறி பேசி வருகிறார். இன்னொரு கட்சியின் செயல்பாடுகளில் தலையிடுவது நன்றாக இருக்காது. கூட்டணிக் கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக திருமாவளவன் சொல்வது தவறானது. அதிமுகவில் பிரிந்திருப்பவர்களை இணைப்பது எங்கள் வேலை அல்ல, பிற கட்சி விவகாரங்களில் பாஜக எப்போதும் தலையிடாது.
திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்று திருமாவளவன் முடிவு செய்துவிட்டார். அவர் தைரியமாக வெளியே வரட்டும்” எனக் கூறினார்.