Homeசெய்திகள்தமிழ்நாடுலாரி மோதி புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மரணம்- முதல்வர் இரங்கல்

லாரி மோதி புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மரணம்- முதல்வர் இரங்கல்

-

லாரி மோதி புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மரணம்- முதல்வர் இரங்கல்

செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகரில் லாரி மோதி திமுக சமூக செயற்பாட்டாளர் ஸ்டாலின் ஜேக்கப் உயிரிழந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் ஜேக்கப்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் வேளாண்மை துறை தனி நிதி நிலை அறிக்கைக்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவைச் சேர்ந்த சமூக வலைதள செயல்பாட்டாளரான ஸ்டாலின் ஜேக்கப் என்பவர் கலந்து கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மறைமலைநகர் சிக்னல் அருகே ஸ்டாலின் ஜேக்கபின் வாகனம் வந்தபோது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்டாலின் ஜேக்கப் மற்றும் அவருடன் வந்த ஜீவா ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

தொடர்ந்து இருவரையும் மீட்ட போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். தொடர்ந்து அவர்களது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் @stalinjacka இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் & உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ