கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன் உடல்நலக்குறைவால் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள இல்லத்தில் காலமானார் அவருக்கு வயது 82.
1980 -ல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1989ல் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர், மேலும் மிசா கைதியாக ஓராண்டு சிறையில் இருந்த இரா.மோகன் கடந்த 7 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
அவரது உடலுக்கு திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். தகலறிந்து சென்னையில் இருந்து விமானம் கோவை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மறைந்த இரா.மோகன் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
அவருடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகளும் இரா.மோகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மறைந்த இரா.மோகன் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலிக்கு நெருக்கமானவர் மற்றும் கோவை மாவட்டத்தில் முதல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.