Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிட்டனர்.

vote

இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில், 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்திருந்தனர். மொத்தம் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலாவதாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன. அதன் பிறகு எட்டு முப்பது மணி அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. மொத்தம் இந்த தொகுதியில் 77 வேட்பாளர்கள் இருப்பதால் காலதாமதத்தை தவிர்க்க இரண்டு அறைகளில் மொத்தம் 16 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் மூன்று அலுவலர்கள் பணியமர்த்த பட உள்ளனர். மேலும் நுண் பார்வையாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்..

vote1

3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. அதில் 19 ஆயிரத்து 867 வாக்குகள் பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் முதலிடத்திலும் 7 ஆயிரத்து 324 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் தென்னரசு இரண்டாம் இடத்திலும் உள்ளார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மையம் முன் திமுக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ