Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுகவை விட 3 மடங்கு வாக்கு அதிகம் பெற்ற காங்கிரஸ்

அதிமுகவை விட 3 மடங்கு வாக்கு அதிகம் பெற்ற காங்கிரஸ்

-

அதிமுகவை விட 3 மடங்கு வாக்கு அதிகம் பெற்ற காங்கிரஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 3 மடங்கு அதிக வாக்குகளை பெற்றுள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன்.

Election

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிட்டனர்.

இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில், 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்திருந்தனர். மொத்தம் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 3 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், 25 ஆயிரத்து 33 வாக்குகள் பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் முதலிடத்திலும் 8 ஆயிரத்து 354 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் தென்னரசு இரண்டாம் இடத்திலும் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2005 வாக்குகளும், தேமுதிக 235 வாக்குகளும், பிற கட்சிகள் 178 வாக்குகளும் பெற்றுள்ளன.

ஈரோடு கிழக்கில் இதுவரை நடந்த தேர்தல்களின் வெற்றி வித்தியாசத்தைவிட அதிக வாக்குகளுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். கிட்டதட்ட 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் உள்ளார்.

MUST READ