Homeசெய்திகள்தமிழ்நாடு22 மாத கால திமுக ஆட்சிக்கு அங்கீகாரம்- அமைச்சர் ரகுபதி

22 மாத கால திமுக ஆட்சிக்கு அங்கீகாரம்- அமைச்சர் ரகுபதி

-

22 மாத கால திமுக ஆட்சிக்கு அங்கீகாரம்- ரகுபதி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு என்பது 22 மாத கால திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Minister Ragupathi News in Tamil, Latest Minister Ragupathi news, photos,  videos | Zee News Tamil

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மோதிரம் அணிவித்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிறந்த ஆறு குழந்தைகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்து நகரச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு என்பது 22 மாத கால திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம். அதிமுகவை பற்றி விமர்சிக்க நாங்கள் தயாராக இல்லை. தேர்தலுக்கு தேர்தல் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். மத்தியில் மாற்றத்தை கொண்டுவந்தால்தான் நாட்டை காப்பாற்ற முடியும்” எனக் கூறினார்.

MUST READ