Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழில் பெயர் பலகை - நீதிபதிகள் புது உத்தரவு

தமிழில் பெயர் பலகை – நீதிபதிகள் புது உத்தரவு

-

தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு 50 ரூபாய் அபராதம் என்பது போதாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழில் பெயர் பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, தீரன் திருமுருகன் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அவர்கள் கூறும்போது, 1948ல் 50 ரூபாய் அபராதம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு வரை 349 உணவகங்களிடம் இருந்து 32 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் இதுபோன்ற செயல்களுக்கு அபராதம் மட்டும் போதுமானதல்ல. தீவிரமான  என்று தெரிவித்தனர்.

மேலும் அபராதத்தை உயர்த்தி வசூலிக்கவும், தொடர்ந்து இதில் ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கையும் எடுப்பது தொடர்பாக அரசின் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

MUST READ