வாக்களித்த 6 பேருக்கு நன்றி – தேர்தல் மன்னன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எனக்கு வாக்களித்த 6 பேருக்கு நன்றி என தேர்தல் மன்னன் பத்மராஜன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தேர்தல் மன்னன் பத்மராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பரபரப்பான ஈரோடு இடைத்தேர்தலில் தனக்கு ஆறு ஓட்டு கிடைத்திருப்பது மிகப் பெரிய சந்தோஷத்தை அளித்திருக்கிறது.
தனக்கு இது 233-வது தேர்தலாகும். தான் இதுவரை இது போன்று 77 வேட்பாளர்கள் போட்டியிடும் ஒரு பரபரப்பான தேர்தலில் போட்டியிட்டதில்லை. இந்த பரபரப்பான தேர்தலில் இந்த தொகுதிக்கு சற்றும் அறிமுகம் இல்லாத எனக்கு, மக்கள் ஆறு வாக்குகளை அளித்துள்ளனர். இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்து இருக்கிறது. தோல்வியையும் மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்வது தான் தன்னுடைய சுபாவம்” எனக் கூறினார்.