- Advertisement -
மூன்றரை மணி நேரம் மேக்கப் போடும் காஜல் அகர்வால். இந்தியன் 2 படத்தில் 80 வயது மூதாட்டி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால்.
இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் -2 படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரசூல் பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, குரு, சோமசுந்தரம், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
குழந்தை பிறந்து பிறகு ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பில் நடிக்க தொடங்கியுள்ளார் காஜல் அகர்வால்.
இப்படத்தில், காஜல் அகர்வால் 90 வயது கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
காஜலுக்கு 80 வயது மூதாட்டி கதாபாத்திரம் என்பதால் இவருக்கு ஹாலிவுட் கலைஞர்கள் மேக்கப் போடுகிறார்கள். மேக்கப் போடுவதற்கு அவருக்கு தினமும் மூன்றரை மணி நேரம் ஆகிறது.